கெத்துகாட்டிய எடப்பாடி மொக்கையான பன்னீர்

 கெத்துகாட்டிய எடப்பாடி மொக்கையான பன்னீர்

நடக்குமோ நடக்காதோ என்றிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு வழியாக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று (16-6-2022) காலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்கு முன்னாதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திய லிங்கம், புகழேந்தி என அவர் தரப்பு 10 பேர் வந்திருந்தார்கள். மற்ற அனைத்து தலைவர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் இ.பி.எஸ். பக்கம்தான் நின்றார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்த போது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் எவரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது எடப்பாடி ஆதரவாளர்கள் எழுந்து நின்று ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கத்தை எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களின் முழக்கத்தால் பொதுக் குழு நடைபெறும் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. திரண்ட நிர்வாகிகள் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இரண்டு ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 3000 பேர் வந்துள்ளனர். அவர்கள் தவிர, பொதுக்குழு உறுப்பினர் அல்லாத நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதியில் திரண்டுள்ளனர்.

இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கான பல்வேறு ஏற்பாடுகள் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றுள்ளது. பேனர், கட் அவுட் வரவேற்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தலைமையிலான அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்தப் பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என்று வழக்குத் தொடுத்தவரும் பன்னீர்தான். இதை நேற்றிரவு நீதிபதிகள் அவசர வழக்காக எடுத்து தீர்ப்பு கூறினார். அதில் எடிப்பாடி தரப்பு அளித்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. இந்த 23 தீர்மானங்களையும் படிக்க லாம் அதை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியிருந்தார்கள்.

இதைத் தனக்குக் கிடைத்த சாதகமான தீர்ப்பு எனக் கருதி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் பன்னீர்செல்வம் தரப்பு. ஆனால் பன்னீரோ இன்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்குத் தடையும் கேட்டுவிட்டு கூட்டத்திலும் தில்லாக வந்து கலந்துகொண்டனர். பல பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்திய லிங்கத்தைப் பார்த்து துரோகி என்றும் பன்னீரைப் பார்த்து வெளியேறு வெளி யேறு என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

எடிப்பாடி வந்த பிறகு கூட்டம் தொடங்கியது. முதலில் வந்த சி.வி.சண்முகம் பேசும்போது இந்த 23 தீர்மானங்கள் தவிர்க்கப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர் களின் நோக்கம் ஒற்றைத்தலைமைதான் என்றார். அதனைத் தொடர்ந்து அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெக்கப்பட்டார். அவருக்கு மாலை அணிவித்து மறியாதை செய்யப்பட்டது. பிறகு அவர் பேசும்போது…

“அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர்களும் ஒற்றைத் தலைமை தேவை என்கிற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வருகிற 11-7-2022 அன்று மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் வைத்தியலிங்கமும் எழுந்து இன்னொரு மைக் கில் பேச முற்பட்டனர். ஆனால் அந்த மைக் வேலை செய்யவில்லை. அதனால் உரக்கக் கத்தி “இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது” என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியேறினார்கள். அப்போது மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் அங்கு வந்து அவர்களைப் பத்திரமாக வழி அமைத்து ஒழுங்குபடுத்தித் தந்தார்கள்.

வெளியே வந்த வைத்தியலிங்கம் “சட்டத்துக்குப் புறம்பாக நடத்த இந்தக் கூட்டம் செல்லாது. அது அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்குத்தான் இட்டுச்செல்லும்” என்று மீடியாக்களுக்கு அறிவித்துவிட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களாகவே பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். காரணம் கட்சியில் பன்னீரை எடப்படி கழட்டி விடுவார் என்பது தெரிந்திருந்தது. பன்னீரைப் புரிந்துகொண்ட எடப்பாடி அவர் முதலமைச்சராக இருந்தபோதே மாவட்டச் செயலாளர்களை அவருக்குச் சாதக மானவர்களை நியமித்திருந்தார். தலைவலியாக இருந்த பன்னீரை எப்படியாவது கழட்டிவிட திட்டமிட்டிருந்தார். இதுதான் சமயம் என்று பொதுக்குழுவை கூட்டி கட்சிக்குப் பொதுச்செயலாளரை நியமித்து அவர் மூலமாக பன்னீருக்கு டெம்மி போஸ்ட் கொடுத்து கட்சியில் கடைநிலை தலைவராக ஆக்கி ஓரம்கட்டிவிட லாம் என்று திட்டமிட்டு காய் நகர்த்தினார்.

இதைத் தெரிந்துகொண்டுதான் பன்னீர் பொதுக்குழு கூட்டத்தைத் தடுத்து நிறுத்த திட்டமிட்டார். ஆனால் அது நடைபெறவில்லை. கடைசியில் கூட்டத்துக்குத் தடையும் கேட்டுவிட்டு கூட்டத்திலும் கலந்துகொண்டு மொக்கையாகிவிட்டார் பன்னீர்செல்வம். ஆனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தி புதிய அவைத் தலை வரையும் நியமித்து தான்தான் ஒற்றைத்தலைமை என்று உறுதி செய்து நிரூபித்து கெத்துகாட்டிவிட்டார் எடிப்பாடி பழனிச்சாமி.

காலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அசைவ விருந்து இந்தப் பட்டியலில் இல்லை. சைவ உணவுகளின் மெனு லிஸ்ட்டில், வெள்ளை சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர்சாதம், வெஜ் புலாவ், உருளைக்கிழங்கு பொரியல், பருப்பு வடை, முட்டை கோஸ் பொரியல், கேரட் பொரியல், அப்பளம், மோர் மிளகாய், ஊறுகாய், பாதாம் கீர், ஜாங்கிரி ஆகியவை பரிமாறப்பட்டது. ஜெயலலிதா இருக்கும்போது நடத்தப்படும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் மதிய உணவாக அசைவ உணவு விருந்து படைக்கப்படும். கட்சியினர் அசந்து போகும் அளவுக்கு சிக்கன், மட்டன், மீன் என்று தடபுடல் விருந்து நடைபெறும். ஆனால், இன்று சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது பல உறுப்பினர்களை சலிப் படையச் செய்தது என்கிறார்கள்.

ஆனால் எடப்பாடி வீட்டில் இன்றிரவு கறி விருந்து நடைபெறும். பன்னீர் வீட்டில் வெறும் விருந்துதான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...