குவைத் நாட்டுக்கு 2 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் ஏற்றுமதி

 குவைத் நாட்டுக்கு 2 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் ஏற்றுமதி

மாடு வளர்ப்பு மிகவும் அருகிவிட்டது. அதனால் மாட்டுச்சாணமும் அரிதாகி விட்டது. மாட்டுச்சாணியை காலில் ஒட்டிக் கொண்டால் ‘அட சீ’ என காலை உதறிவிட்டு போகிறவர்களைப் பார்க்கலாம். நாம் மிகச் சாதாரணமாகப் பார்க்கும் மாட்டுச்சாணத்தைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறது குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம்.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குவைத் நாட்டுக்கு 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது உலக நாடுகளில் மிகவும் வியப்பாக பார்க்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப் படுகிறது.

உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்குத் திரும்பியுள்ளன. மேற்காசிய நாடான குவைத்தும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வரு கிறது. குவைத்தில் பசுஞ்சாணத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை உரமிடு வதால் பேரீச்சை விளைச்சல் அதிகரித்து, திரட்சியான பழங்கள் கிடைப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குவைத்தைச் சேர்ந்த லாமோர் என்கிற நிறுவனம் 1.92 மெட்ரிக் டன் நாட்டு மாட்டுச்சாணத்தை இறக்குமதி செய்ய ஆர்டர் செய்துள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த சன்ரைஸ் அக்ரிலேண்ட் மற்றும் டெவலப் மென்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற் றுள்ளது, என்று இந்தியக் கரிம உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் அதுல் குப்தா தெரிவித்தார்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில், “இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் சாணம் குவைத் இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை. ஜெய்ப்பூர், டோங்க் ரோடு, ஸ்ரீபிஞ்ச்ராபோல் கவுஷாலா வில் அமைந்துள்ள சன்ரைஸ் ஆர்கானிக் பூங்காவில், சுங்கத் துறையின் மேற் பார்வையில், மாட்டுச் சாணத்தைக் கொள்கலன்களில் அடைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் பாதி, ஜூன் 15-ம் தேதி கனகபுரா ரயில் நிலையத்திலிருந்து சுங்கத் துறையினரின் மேற்பார்வையில் மாட்டுச்சாணம் உருளைகளில் அடைக் கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது” என்றார்.

மாட்டுச்சாணம் ஏற்றுமதி பற்றி இந்திய இயற்கை விவசாயப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அதுல் குப்தா கூறியதாவது:

நம் நாட்டிலிருந்து மாட்டுச்சாணத்தை குவைத் வாங்குவது இதுவே முதன் முறை. உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்து வதால் இங்கிருந்து மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களின் ஏற்றுமதி அதிகரித் துள்ளது.

கடந்த 2020 – 2021ம் ஆண்டில் மட்டும் 27 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்புள்ள மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டன.

மாட்டுச் சாணத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த அளவில் குவைத் மட்டுமல்லாது, மாலத்தீவு, மலேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக் கும் இந்தியாவிலிருந்து பசுஞ்சாணம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.