மறக்கமுடியாத இசையமைப்பாளர் கோவர்த்தனம்

 மறக்கமுடியாத இசையமைப்பாளர் கோவர்த்தனம்

ஜெமினி கணேசன் நடித்த பூவும் பொட்டும் படத்தில் நாதஸ்வர ஓசையிலே… ஜெயசங்கர் நடித்த பட்டணத்தில் பூதம் படத்தில் அந்த சிவகாமி மகனிடம்…  ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர் ஆர். கோவர்த்தனம்.

தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை பெயர் இராமச்சந்திர செட்டியார். பிரபலமான இசையமைப்பாளர் கோவர்த்தனத்தின் சகோதரர் ஆர். சுதர்சனம் .

தந்தையும் கர்நாடக இசை அறிந்தவர். தந்தையிடமும், சகோதரரிடமும் கோவர்த்தனம் கர்நாடக இசையைப் பயின்றார். சென்னைக்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டார். தந்தை இராமச்சந்திர செட்டியார் குடும்பத்துடன் சென் னைக்கு குடிபுகுந்தார்.

கோவர்த்தனம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் அறிந்தவர்கள் என்பதால் 1953 ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட ‘ஜாதகம்’ என்கிற படத்தில் முதன்முதலாக இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படத்தில்தான் பி. பி. ஸ்ரீனிவாஸ் தமிழில் பாடக ராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்  பல காலம் இசைத்துறையில் இருந்திருந்தாலும் எண்ணிக்கையில் சில படங்களுக்கு (10க்கும் குறைவு) மட்டுமே இசை அமைத்துள்ளார். அதில் பெரும் பாலான பாடல்கள் அற்புதமான பாடல்கள்.

இவர் MS விஸ்வநாதன் அவர்களிடம் உதவியாளராக பல காலம் பணி ஆற்றி யவர். இளையராஜா, தேவா உட்பட பல இசை அமைப்பாளர்களுக்கு இசைக் குறிப்பு எழுதி கொடுத்து பணி செய்தவர். பல மொழிகளில் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவர் இசை அமைத்த படங்கள் மிகச் சில. ஆனால் பல மறக்க இயலாத பாடல் களைக்  கொடுத்துள்ளார். பல பாடல்களை MSV இசை என்றே பலரும் நினைத்த துண்டு. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பல மென்மையான பாடல் கள். அதில் அனைவருக்கும் பிடித்த பாடல், பூவும் பொட்டும் என்ற படத்தில் வரும் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்ற TMS, P சுசீலா பாடிய பாடல்.

இதே படத்தில் வரும் மற்ற ‘எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா’ என்ற P சுசீலாவின் பாட்டு, PBS இன் ‘உன் அழகை கண்டு கொண்டால் பெண் களுக்கே ஆசை வரும்’ என்ற பாடல் மற்றும் TMS பாடிய ‘முதல் என்பது தொடக் கம் முடிவென்பது அடக்கம்‘ என்ற பாடல்களும் மறக்க முடியாதவை.

‘வரப்பிரசாதம்’ என்ற படத்தில் வரும் யேசுதாஸ், வாணி ஜெயராம் பாடிய ‘கங்கைநதி ஓரம் ராமன் நடந்தான்’ என்ற பாடல் மிக அழகாக மென்மையாக இசை அமைக்கப்பட்ட பாடல்.

‘கைராசி’ என்ற படத்தில் உள்ள P சுசீலாவின் ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ மற்றும் TMS, P சுசிலா பாடிய ‘காதல் எனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ’ என்ற பாடல்களும் நெஞ்சில் நிறைந்தவை ஆகும்.

இவைகள் எல்லாவற்றையும் விட R. கோவர்தன் அவர்களின் மாஸ்டர் பீஸ் படம் ‘பட்டணத்தில் பூதம்’ படபபாடல்தான். அப்பப்பா என்ன ஒரு பாடல்கள். ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்றால் இந்த படம் தான்.

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று TMS, P சுசிலா வின் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்ற பாடல். இதில் வரும் வீணை இசை அற்புதம்.

மற்றொரு பாடல் P சுசிலா பாடிய ‘நான் யார் யார் என்று சொல்லவில்லை’ என்ற அருமையான பாடல். இந்தப் பாடலில் வரும் பலவித இசை கோர்வைகளும், பாடல் காட்சி அமைப்பு, படமாக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இசை வாய்ப்பு இல்லாதபோது எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா எனப் பல இசையமைப்பாளர் களுக்கு ‘இசை ஒருங்கிணைப்பாளராக  20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

1990களில் ‘புதிய பறவை’ படப் பாடல்  மீள்-இசையமைப்பொன்றின்போது மின் சாரம் தாக்கி, தனது செவித்திறனை இழந்தார். 1990-களில் சென்னையில் கடந்த 1992ம் ஆண்டு, இசைப்பயணத்தை முடித்துக்கொண்ட கோவர்த்தனம், சென்னை மயிலாப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் குகை பகுதிக்கு வந்து மனைவி இந்திரா பாயுடன் வசித்து வந்தார். 

வறுமையில் இவர் வாடி வந்ததை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

இந்த நிதியை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வழங்கினார். அப் போது அமைச்சர் அவரிடம், “தமிழக முதலமைச்சர் அவர்கள் நிதியை நேரில் தர கூறி என்னை அனுப்பி வைத்துள்ளார். ரூ.10 லட்சம் நிதி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மாதா மாதம் வட்டி ரூ. 8125 உங்களுக்குக் கிடைக்கும். இந்த மாதம் பணம் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் அவர்கள் பணமாகத் தர கூறி பணத்தைக் கொடுத்தனுப்பி உள்ளார்” எனக் கூறி பணம் ரூ.10 ஆயிரத்தை வழங்கி னார். அப்போது கோவர்த்தனம் மனைவி இந்திராபாய், இந்த உதவிகளை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என கூறி கண்கலங்கினார்.

கோவர்த்தனம்  தனது 91வது வயதில் 18 செப்டம்பர், 2017ல் சேலத்தில் கால மானார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...