பெண்கள் தினம் கொண்டாட்டம் | ஆர்.கே நகர் கல்லூரி
மார்ச் 8 அகில இந்திய பெண்கள் தினம். வெறும் ஒற்றை நாள் கொண்டாட்டமாக இது இருந்துவிடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த பெண்களின் எதிர்பார்ப்பும்.
குடும்பத் தேரின் சக்கரமாக, கடலளவு திறமைகளை வளர்த்துக் கொண்டு, அனைத்து உணர்வுகளின் கண்ணாடியாக, அன்பின் முகவரியாக, உயிர்க்கப்பலைச் செலுத்தும் மாலிமியாக வாழும் அனைத்துப் பெண்களும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
வடசென்னையின் அடுத்த முகமாக விளக்கும் ஆர்.கே நகர் கலைக் கல்லூரியில் இன்று மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா விருந்தினர்களையும், மாணவர்களையும் ஆசிரியர் ஹேமா ஜோ அவர்கள் அன்போடு வரவேற்றார். திரு.ஜெய்கணேஷ், திரு. பார்வதிநாதன், சிறப்புரையும், வாழ்த்துரையும், திரு. ஜக்கைய்யா அவர்கள் நன்றியுரையும் பேசினார்கள்
முதல்வர் சுடர்கொடி அவர்களின் பேச்சில் பிள்ளைகள் மேலுள்ள அக்கறையும் அன்பும் தெரிந்தது. வெறும் படிப்பை மட்டும் மாணவர்களுக்கு கற்றுத்தராமல் சமூகத்தில் எங்கள் மாணவர்கள் எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி குழு அமைப்பது என்று நிறைய ஆக்டிவிட்டிஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆர்.கே நகர் கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் மற்ற கல்லூரிகள் இணைந்து நடத்தும் விழாக்களில் பங்கேற்று பரிசிலும் பெற்று கல்லூரிக்கு மங்கா புகழைப் பெற்றுத் தருகிறார்கள்.
ஒரு சின்ன தன்னம்பிக்கை உரையோடு இந்த விழா நீண்டது. பிள்ளைகளுக்கு நேரத்தின் அவசியத்தையும். நம்மைப் பற்றிய சிந்தனைகள் பாசிட்டிவ்வாக இருத்தல் அவசியம் என்பதையும் கூடவே சில கருத்துகளையும் பேசும் போது அவர்களின் முகத்தில் அத்தனை கவனிக்கும் திறன் அக்கறையான பிள்ளைகள், நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.
ஒரு நல்ல தலைமையின் கீழ் நடைபெறும் இந்தக் கல்லூரி மிகவிரைவில் பெரிய இடத்தைப் பிடிக்கும். அந்த பிள்ளைகளின் கண்களில் நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. கைபிடித்து நடத்தி செல்ல நல்ல கல்லூரி முதல்வர் இருக்கிறார் அவருக்குத் துணையாக நிர்வாகிககளும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
நல்லதொரு இனிய விழாவாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சுடர்கொடி அவர்களின் நினைவுப் பரிசாக அவர் எழுதிய தன்னம்பிக்கை புத்தகம் புக்கர் தி வாஷங்டன் புத்தகத்தை பரிசளித்தார் கூடவே நம் நண்பர் ராசி அழகப்பன் கவிதைத் தொகுப்பும் மனமகிழ்வும் திருப்தியும்.