கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மோகன் (மோகன் ராவ்). கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித் திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால்தான் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில் அறிமுக மானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். இவர் மைக் பிடித்து பாடும் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானார். இதனால் மைக் மோகன் என்றும் பட்டப் பெயர் வைத்து ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவைத் தனது குருவாகக் கருதினார்.

மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி.வி.கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர் சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திரா வின் ‘கோகிலா’ திரைப்படம் மூலம் (1977) கமல்ஹாசனுடன் அறிமுகமானார். 1980இல் ‘மூடுபனி’ வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980களில் மோகன் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தன.
கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மோகன் என்ற பெயருடன் ‘கிழக்கே போகும் ரயில்’ (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறு ஆக்கமான ‘தூரப்பு வெள்ளே ரயில்’ என்ற தெலுங்குப் படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்குப் பதிப்பை பாபு இயக்கியுள்ளார். அதன்பிறகு இயக்குநர் மகேந் திரன் இவரை ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற படத்தில் தமிழில் அறிமுகப் படுத்தினார். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப் படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படத்தில் (1982) பெற்றார்.

80களின் சினிமா காலகட்டத்தில் ஒரு நடிகருடன் தங்கள் மகள்கள் நடித்தால் கொஞ்சமும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என ஹீரோயின்களின் அம்மாக்களால் புகழப்பட்ட ரத்தின நடிகர் மோகன் என்று நடிகை சுஹாசினி ஒரு பேட்டியில் பெருமையுடன் பகிர்ந்தார்.
இவர் நடித்த விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டைவால் குருவி (1987), மற்றும் சகாதேவன் மகாதேவன் (1988) போன்ற வெற்றிப் படங்களின் மூலம் உச்சத்தை அடைந்தார்.
கோவை தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக திரைப்படங்களில் நடித்தார். 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கினார். இப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றதோடு, இயக்குநர் மணிரத்னத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர்
80களின் திரைப்படங்களுக்காகவும், இளையராஜாவின் பாடல்களுக்காகவும், பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தாலும் இன்றும் பேசப்படுகிறார். இளையராஜா ஹிட்ஸ் என்றால் அதில் மோகன் படப் பாடல்களே பிரதானம்.
ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என ஓயாமல் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.

நடிகர் மோகன் உச்சத்தில் இருந்தபோதே சில நெகட்டிவ் கேரக்டர் ரோல்களில் நடித்தார். உதாரணமாக விதி, 100வது நாள், ரெட்டைவால் குருவி போன்ற படங் கள் இவரது சினிமா பயணத்துக்குத் தடையாக அமைந்தது. இன்னொரு காரணம், இவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர். ஒரு கட்டத் தில் மோகனுக்குப் பேசுவதற்கு அதிக டிமாண்ட் வைத்தார் எஸ்.என். சுரேந்தர். இதனால் இருவருக்கும் பிரச்சினையாகி கடைசியில் இரண்டு படங்களுக்கு மோகனே சொந்தக் குரலில் (கிருஷ்ணன் வந்தான்) பேசினார். அதன் பிறகு சரசரவென மோகன் சினிமா மார்க்கெட் சரிந்தது.
அதன் பிறகு துணைப் பாத்திரங்களில் சினிமாவில் நடிக்காமல் எவர்கிரீன் ஹீரோ வாகவே இருக்கிறார் மோகன்.

தற்போதும் நடிகர் மோகன் தமிழ் சினிமாவின் 1980 காலகட்ட ரசிகர்களின் மன தில் எவர்கிரீனாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.