சூரி கதை நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்னாச்சு?
கொரோனாவால் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படம் கொரோனாவால் தடைபட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக முதன்முறையாக நகைச்சுவை நடிகர் சூரி களமிறங்கியுள்ளார்.
படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
‘அசுரன்’ என்ற சிறந்த படைப்பிற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படமென்பதால் திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படமாக ‘விடுதலை’ உள்ளது.
அதுமட்டுமின்றி வெற்றிமாறன் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்து இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்.
எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வந்தது.
22, ஏப்ரல் 2021 அன்று படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
வைகை புயல் வடிவேலுவுக்கு நாயகன் அந்தஸ்தை பெற்று வெற்றி படைப் பாக அமைந்த ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தைப் போல நடிகர் சூரிக்கு இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இசைஞானி இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுப்பார் எனத் தெரிகிறது.
இயக்குநர் வெற்றிமாறனின் முந்தைய படங்களைப் போல கண்டிப்பாக இந்தப் படமும் ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.