இன்றைய தினப்பலன்கள் (10.12.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (10.12.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவருவாயை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்களின் மரியாதை மேம்படும். அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : மரியாதை மேம்படும்.

ரிஷபம் :

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகளும், தெளிவும் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : இழுபறிகள் மறையும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

.

மிதுனம் :

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மாணவர்களுக்கு மேம்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கடகம் :

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வர்த்தகம் சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : ஆலோசனை வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சியும், தெளிவும் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : புரிதல் ஏற்படும்.
பூரம் : திருப்தி உண்டாகும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி :

பேச்சு திறமைகளால் காரியசித்தி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் பிறக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
அஸ்தம் : அனுபவம் பிறக்கும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

துலாம் :

குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பூர்வீக சொத்துக்களைமாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :

வாக்கு சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் நிதானத்தை கையாளுவது நல்லது. பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.
அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.
கேட்டை : எண்ணங்கள் மேம்படும்.

தனுசு :

எண்ணிய பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியமதொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தடைகள் நீங்கும்.
பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.

மகரம் :

எதிர்பார்த்திருந்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். வருவாய் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திராடம் : லாபம் மேம்படும்.
திருவோணம் : தேவைகள் நிறைவேறும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

கும்பம் :

மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உதவிகள் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் மேம்படும்.

மீனம் :

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளுக்கேற்ப வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : மாற்றமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...