காந்திஜி பற்றி வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய சர்ச்சை!

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (12-10-2021) நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று ஆறு மாதங் களுக்குப்பின் முதல் மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின்படி அடுத்த கருணை மனுவை எழுதினார்” எனத் தெரிவித்தார்.

 அந்த விழாவில் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் பேசும் போது, “மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. வீர சாவர்க்கர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை 1911-ஆம் ஆண்டில் எழுதினார் என்றும் அப்போது காந்தி தென்ஆப்ரிக்காவில் இருந்தார் என்றும் 1915-ஆம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு வந்தார் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்தின் கருத்தை அடுத்து, “மகாத்மா காந் திக்குப் பதிலாக வீர சாவர்க்கரை தேசத் தந்தையாக பா.ஜ.க. முன்னிலைப் படுத்தும்” என்று எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
     ஓவைசியின் கருத்து குறித்து வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் பதிலளித்துள்ளார். “5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் பங்களித்திருக் கிறார்கள். மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்க வில்லை. சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. எனது தாத்தா அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்புதான் கோரினார். அவர் உண்மையில் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால், அவருக்கு ஏதாவது பதவி வழங்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா போன்ற நாடுகளில் தேசப்பிதா என ஒருவர் மட்டும் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டார் கள். ஆதலால், இந்தத் தேசத்தின் தந்தை மகாத்மா காந்திதான் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்கமுடியாது. என்னைப் பொறுத்தவரை தேசத்தந்தை என்ற கருத்துரு
வையே ஏற்கமுடியாது. அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வீர சாவர்க் கரை யாரும் தேசத் தந்தையாக்க வேண்டும் எனக் கேட்கவில்லை. ஏனென் றால் இந்தக் கருத்தே ஏற்க முடியாத ஒன்று” எனத் தெரிவித்தார்.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1910-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ஆட்சியராக இருந்த ஜாக்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் சாவர்க்கரின் சகோதரர்தான் முதலில் கைதாகிறார். பின்னர் நடத் தப்பட்ட விசாரணையில் இந்தக் கொலைக்கான துப்பாக்கியை லண்டனில் இருந்து அனுப்பியவர் சாவர்க்கர் எனத் தெரியவந்தது. ஆங்கிலேய அரசின் கைதியாக சாவர்க்கரின் வாழ்க்கை தொடங்கியது. சுமார் 25 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர் சாவர்க்கர்.

அந்தமான் சிறைச்சாலையில்தான் 1911 முதல் சாவர்க்கரும் அடைக்கப் பட்டிருந்தார். சார்வக்கர் சிறை வைக்கப்பட்டிருந்த அறை எண் 52. சுமார் 9 ஆண்டுகள் அந்தமான் சிறைவாசத்தை அனுபவித்த சாவர்க்கர் தமது செயல் களுக்காக வருந்தி ஆறு முறை ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என்றும், பெரும்பாலும் இந்த மன்னிப்புக் கடிதங்களில் சாவர்க்கர் தமக்கு மன்னிப்பு அளித்து இந்தியாவில் உள்ள இதர சிறைச்சாலை ஒன்றில் அடைக்குமாறு கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படிச் செய்தால் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருக்கவும் தயார் என்பதும் சாவர்க்கர் கடிதங்கள் எழுதியதாக தெரிவித்தனர். சிறைவாசத்துக்குப் பின்னர்ஆங்கிலேய அரசாங்கத்திடம் மதிப்பூதியம் பெற்ற ஒரே சிறைவாசியும் சாவர்க்கர் தான்.

நாடு விடுதலை அடைந்தபோது 1949-ல் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது நாதுராம் கோட்சேவுடன் கைது செய்யப் பட்டவர் சாவர்க்கர். 1966-ம் ஆண்டு சாவர்க்கர் மறைந்தார். இதுதான் சாவர்க்கர் எனும் சுதந்திரப் போராட்ட தியாகியின் சுருக்கமான வரலாறு.  

சாவர்க்கர் பெயரை மீண்டும் மீண்டும் தூசி தட்டி கொண்டுவர என்ன காரணம் தெரியுமா? அவர் முன்வைத்த இந்துத்துவா கோட்பாடுதான். தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட சாவர்க்கருக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் மரியாதை செலுத்தப்படுவது என்பது வினோதம் தான்.

இந்த சர்ச்சைகளின் உச்சமாகத்தான் இப்போது, சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது உண்மை. என்பதற்கு ஆதாரமாக Gandhi Ashram Sevagram தமது அதிகாரபூர்வ இணையதளத்தில் சாவர்க்கர் தொடர்பான ஏராளமான கடிதங்களை வெளியிட்டுள்ளது.

https://www.gandhiashramsevagram.org/ gandhi-literature/collected-works-of-mahatma-gandhi-volume-1-to-98.php.

சாவர்க்கரின் சககைதிகள் எல்லாம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தாங்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை என அக்கடிதங்களில் புலம்பினர் சாவர்க்கர் சகோதரர்கள். இதையடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தின் கவனத் துக்குக் கொண்டுசெல்லும் கடிதங்களை காந்தி தொடர்ந்து எழுதினார். இதை யடுத்து சாவர்க்கர் அடுத்தடுத்து மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்திருக்கிறார். காந்தியாரின் கடும் நெருக்கடியாலும் சாவர்க்கரின் இடைவிடாத மன்னிப்புக் கடிதங்களால் மட்டுமே அவர் மகாராஷ்டிராவின் எரவாடா சிறைக்கு மாற்றப் பட்டார். விஷயம் இப்படி இருக்க, சாவர்க்கர், மகாத்மா காந்திக்கு நிகராகப் போற்றப்படுவது கேலிக்கூத்து.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...