மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள்
ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது., மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகவும் சிரமத்துடன் நடந்தும், வாகனத்தை இயக்கியும் செல்கிறார்கள்.
நேற்று ஆரம்பித்த இந்த மழை இன்னும் கனமழையாக நான்கு நாட்கள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த மழையின் காரணமாக புறநகர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.