இன்றைய தினப்பலன்கள் (04.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (04.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கை கூடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்களில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் ஏற்படும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : மாற்றங்கள் பிறக்கும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம் :

மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

.

மிதுனம் :

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆலோசனைகள் வேண்டும்.

கடகம் :

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்மம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக்கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : ரகசியங்களை தவிர்க்கவும்.

கன்னி :

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் அகலும்.

துலாம் :

உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம் :

சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : தடைகள் குறையும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு :

குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : திருப்திகரமான நாள்.

மகரம் :

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.

கும்பம் :

உடல் நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தனவரவுகள் எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : செலவுகள் ஏற்படும்.
சதயம் : லாபம் உண்டாகும்.
பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம் :

எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். குடும்ப நபர்களிடம் பழைய விஷயங்களை உரையாடி மனக்கசப்புகளை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கவும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.