வரலாற்றில் இன்று – 04.06.2021 எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 வரலாற்றில் இன்று – 04.06.2021 எஸ்.பி.பாலசுப்ரமணியம்

40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 2016ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார். அதை தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

பத்மஸ்ரீ (2001), பத்மபூஷண்(2011), கலைமாமணி விருது, ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.

60-களில் தொடங்கிய இவரது இசைப்பயணம் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமையுடன் வலம் வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் 25 தேதி இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் மறையாது.

வ.வே.சுப்பிரமணிய ஐயர்

இன்று இவருடைய நினைவு தினம்….!

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும் | எழுத்தாளர் ஜெயமோகன்சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டம் வரகனேரியில் பிறந்தார்.

இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது, சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம் அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.

இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.

இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி (முயுஆடீயுசுயுஆயுலுயுNயு – யு ளுவுருனுலு), மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1959ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் பிறந்தார்.

1910ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஹோவர்கிராஃப்ட்டை (KAMBARAMAYANA – A STUDY) கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொக்கரல் பிறந்தார்.

1919ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...