இன்றைய தினப்பலன்கள் (15.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (15.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். தம்பதியர்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உடல்நிலை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.
பரணி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம் :

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுனம் :

தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.

கடகம் :

தொழில் தொடர்பான பயணங்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். தாய்வழி ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : இலாபகரமான நாள்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் சுபவிரயங்களை செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை செய்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : அபிவிருத்தி உண்டாகும்.

கன்னி :

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தாயாரின் ஆதரவின் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் :

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : எதிர்ப்புகளை களைவீர்கள்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : வெற்றி உண்டாகும்.

தனுசு :

பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் ஏற்படும். தர்க்க விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

மகரம் :

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

கும்பம் :

வணிகத்தில் முதலீடுகளால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகோதரர்களின் ஆதரவுகள் மனதிருப்தியை ஏற்படுத்தும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் வாழ்க்கையில் புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : நன்மை உண்டாகும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

மீனம் :

தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...