இன்றைய தினப்பலன்கள் (11.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (11.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதிய நபர்களின் மூலம் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
அஸ்வினி : பாராட்டப்படுவீர்கள்.
பரணி : மாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.

ரிஷபம் :

உறவினர்களுடன் புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : எதிர்ப்புகள் குறையும்.

மிதுனம் :

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.

கடகம் :

புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறைந்து இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

சிம்மம் :

புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். தொலைபேசி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : உற்சாகமான நாள்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி :

சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். வீட்டில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : செலவுகள் ஏற்படும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் :

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.
சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் : குழப்பங்கள் மறையும்.

விருச்சிகம் :

உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : அபிவிருத்தியான நாள்.
கேட்டை : தீர்வு கிடைக்கும்.

தனுசு :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவடையும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவுகள் திருப்தியை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சாதகமாக செயல்படுவார்கள்.
பூராடம் : கலகலப்பான நாள்.
உத்திராடம் : இழுபறிகள் அகலும்.

மகரம் :

வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
திருவோணம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : தெளிவான நாள்.

கும்பம் :

எடுத்த செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளிடம் பொறுமை வேண்டும். தொழில் தொடர்பான மனக்குழப்பங்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கோபத்தை குறைத்து பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.
சதயம் : போட்டிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : குழப்பமான நாள்.

மீனம் :

மனைவிவழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆலோசனைகளால் இலாபம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மனக்கசப்புகள் குறையும்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...