வரலாறு படைத்த துப்பாக்கியின் வரலாறு
உலகம் முழுவதும் ‘ஏ.கே.–47’ துப்பாக்கி பிரபலமாக விளங்குகிறது. 10 கோடிக்கும் அதிகமானதுப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த துப்பாக்கியை ரஷியாவை சேர்ந்த நிபுணர் கலாஷ்நிகோவ் என்பவரே வடிவமைத்து தயாரித்தார்.
அவரின் பெயரினை கொண்டே அதாவது A என்பது ஆட்டோமாட்டிக் (தானியங்கி) என்றும் K என்பது அவர் பெயரின் (கலாஷ்நிகோவ்) முதல் எழுத்தும் ஆக மற்றும் வெளியிட்ட ஆண்டு 1947 என்பதின் 47 இணைத்து AK 47 என அழைக்கப் பட்டது
94 வயதில் அவர் தனது சொந்த ஊரான இஸ்ஹெவ்ஸ்க் நகரில் 23-12-2013-ல் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கலாஷ்நிகோவ் தனது 21-வது வயதில் உள்ளூர் ரெயில்வே ஒர்க்ஷாபில் துப்பாக்கி ஒன்றை தயாரித்தார். பிறகு 5 ஆண்டுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதில் பலமாற்றங்களை செய்து 1946–ல் ஏ.கே.–47 துப்பாக்கியை வடிவமைத்தார்.
1947 பிப்ரவரி மாதம் பெரியஅளவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பிறகு 1949–ல் அது சோவியத் ரஷியா ராணுவத்தில்சேர்க்கப்பட்டது. தனது 30–வது வயதில் ஸ்டாலின் பரிசை பெற்றார்.
90-வது வயதில் அவரை பாராட்டி ரஷியாவின் ஹீரோ என்ற பட்டம் வழங்கி தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவிக்கப்பட்டார். கடந்த ஜூன்மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பேஷ்மேக்கர் பொருத்தப்பட்டது. இப்போது அவர் மரணசெய்தி வெளிவந்துள்ளது.
விக்கிப்பீடியாவில் இருந்து…..ஏகே-47 (Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.ஒன்று நிலையான பிடியுடன் (Fixed Stock) கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (Metal soulder stock) தயாரிக்கப்பட்டது.இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக (Carbine) அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.