வரலாற்றில் இன்று – 11.09.2020 வினோபா பாவே

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.

இவர் ‘மகாராஷ்டிர தர்மா’ என்ற மாத இதழை 1923ஆம் ஆண்டு தொடங்கினார். கதர் ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். ‘பூதான்’ எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே, இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார்.

‘என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள் வாங்கிக் கொண்டவர்’ என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும், தலைவர்களாலும் ‘ஆச்சார்யா’ என்று போற்றப்பட்ட வினோபா பாவே தனது 87வது வயதில் (1982) மறைந்தார்.

இரோசி அமானோ

LED விளக்கை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுள் ஒருவரான ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் இரோசி அமானோ 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

இவர் 2014ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அகசகி, சுச்சி நாகமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.

இந்த நோபல் பரிசானது திறன்மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி (Diode) என்னும் குறைக்கடத்தி கருவியை கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்

1862ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி, வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார்.

1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தமிழ் கவிஞர், சுப்பிரமணிய பாரதியார் மறைந்தார்.

1948ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா மறைந்தார்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!