வரலாற்றில் இன்று – 09.09.2020 ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி

 வரலாற்றில் இன்று – 09.09.2020 ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி

புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தார்.

இவர் எழுதிய பிரச்சார துண்டுகளை பார்த்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.எஸ்.ராஜன்,’நீ எழுத்துலகில் சாதிக்க வேண்டியவன்’ என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி’ பத்திரிக்கையில் சேர்ந்தார்.

நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிக்கை தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுடன் ‘கல்கி’ பத்திரிக்கை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிக்கை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது.

இவர் 35 சிறுகதை தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘பார்த்திபன் கனவு’ தமிழின் முதல் சரித்திர நாவலாகும். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்’, சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும் வரவேற்பை பெற்றன.

1951ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது. ‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.

முன்னோடி பத்திரிக்கையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கல்கி தனது 55வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

முக்கிய நிகழ்வுகள்

1850ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது.

1791ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...