வரலாற்றில் இன்று – 25.07.2020 செம்மங்குடி சீனிவாச ஐயர்

 வரலாற்றில் இன்று – 25.07.2020 செம்மங்குடி சீனிவாச ஐயர்

மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.

இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார்.

மேலும், 1927-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95வது வயதில் (2003) மறைந்தார்.

உலக கருவியல் தினம்

உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயி ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

அதன் பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது. அதன்பிறகு முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலக கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்

1920ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மரபணுவின் சரியான வடிவத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் லண்டனில் பிறந்தார்.

2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...