*****கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில், இடி மின்னலோடு மழை வெளுக்குமாம்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும்.

நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மாலத்தீவு, கேரளா, லட்சத்தீவு கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

***** கொரோனா பேரிடரிலும், மக்களைக் காப்பதோடு தொழில் வளர்ச்சியை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – முதல்வர் பழனிசாமி.

இன்று மட்டும் 16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்கிட கையெழுத்திட்டுள்ளன.

இதன்மூலம் சுமார் 6,555 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் – முதல்வர் பழனிசாமி.

*****திருத்தணிகாசலம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மீது எடுத்த நடவடிக்கை என்ன?:

மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

“முதலமைச்சரை பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா?

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட திருத்தணிகாசலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்கிறோம் – நீதிபதிகள்.

மருத்துவ உதவியாளர்களாக இருப்பவர்களை எல்லாம் மருத்துவர்களாக கருத முடியாது – நீதிபதிகள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...