வரலாற்றில் இன்று – 16.07.2020 அருணா ஆசஃப் அலி

 வரலாற்றில் இன்று – 16.07.2020 அருணா ஆசஃப் அலி

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) 1909ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் பிறந்தார்.

இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் பரிசும், 1991ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

நாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அருணா ஆசஃப் அலி 87வது வயதில் (1996) மறைந்தார். இவரது மறைவிற்கு பின் 1997ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

ஃபிரிட்ஸ் ஜெர்னிகி

ஃபேஸ் கான்ட்ரஸ்ட் மைக்ரோஸ்கோப்பை (Phase-contrast microscope) கண்டுபிடித்த ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) 1888ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் பிறந்தார்.

இவர் கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணப் புகைப்படக்களம், டெலஸ்கோப் கண்ணாடிகளின் பிழைகள், பார்வைத் திறன் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

இவர் தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட கேமரா, சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார். தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இவர் 1953ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஃபிரிட்ஸ் ஜெர்னிகி 77வது வயதில் (1966) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1968ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை புனோவில் பிறந்தார்.

2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் மறைந்தார்.

2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்.

2013ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்திய வரலாற்றாய்வாளர்பருண் டே மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...