இன்றைய தினப்பலன்கள் (13.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (13.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். எதையும் சமாளித்து முன்னேறும் திறமை மேம்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : திறமைகள் மேம்படும்.
கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அவ்வப்போது ஏற்படும் கனவுகளால் குழப்பான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
ரோகிணி : குழப்பம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

மிதுனம் :

கலகலப்பான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சம்பந்தமான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கடகம் :

எந்தவொரு செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கால்களில் அவ்வப்போது வலிகள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
புனர்பூசம் : ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம் :

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

கன்னி :

எந்தவொரு செயலிலும் அவசரமும், பதற்றமும் இன்றி நிதானமாக செயல்படவும். தந்தையிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய மனை தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல்கள் உண்டாகும். மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
உத்திரம் : நிதானமாக செயல்படவும்.
அஸ்தம் : இழுபறியான நாள்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

துலாம் :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : நன்மை உண்டாகும்.

விருச்சிகம் :

எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்களும், செயல்பாடுகளில் மாற்றமும் உண்டாகும். வெளியிடங்களுக்கு செல்லும் போது உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் எழும் கோபங்களையும், உணர்ச்சிகளையும் மற்றவர்களின் மீது செலுத்தாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : மாற்றம் உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : கோபங்களை தவிர்க்கவும்.

தனுசு :

மனதில் புதிய தன்னம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
மூலம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் : வேறுபாடுகள் நீங்கும்.

மகரம் :

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகளும், அதிகாரமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் தீரும்.
திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் :

தந்தையின் அறிவுரைகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப்பணியில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : ஆதரவு அதிகரிக்கும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

மீனம் :

சொந்தமான மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாக்கு சாதுர்யத்தால் மேன்மை உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நன்மையை அளிக்கும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : ஆசிகள் கிடைக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...