வரலாற்றில் இன்று – 12.07.2020 சுந்தர் பிச்சை

தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

இவர் 2004ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and apps-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும், கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மலாலா யூசஃப்சாய்

பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், மலாலா யூசஃப்சாய் 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார்.

மலாலா, 2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையை தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வையே ஐக்கிய நாடுகள் மலாலா தினமாக அறிவித்தது.

பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெண்கள் படிக்கக்கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து இவர் போராடினார்.

இவர் பொது இடங்களிலும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினார். எனவே இவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார்.

இவர் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண் மற்றும் மிக இளையவள் என்ற பெருமையை பெற்றவர்.

முக்கிய நிகழ்வுகள்

1854ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஒளிப்படச் சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்தார்.

2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பல பிலிம்பேர் விருதுகளையும், வங்காள திரை இதழாளர்களின் விருதுகளையும் வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் பிரான் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!