இன்றைய தினப்பலன்கள் (05.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (05.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

எதையும் சமாளித்து முன்னேறும் திறமை அதிகரிக்கும். போட்டிகள் சாதகமான பலனை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : திறமைகள் அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : நற்பெயர் கிடைக்கும்.

ரிஷபம் :

தொழில், வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் குழப்பமான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் எந்த வாக்குறுதிகளையும் தராமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : இன்னல்கள் மறையும்.
ரோகிணி : குழப்பமான சூழல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

மிதுனம் :

வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். கடவுள் பக்தி அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்பாடுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். மனதில் புதிய ஆசைகள், எண்ணங்கள் உண்டாகும். எதிலும் உற்சாகமின்றி செயல்படுவதால் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : காரிய வெற்றி உண்டாகும்.
திருவாதிரை : ஒற்றுமை மேலோங்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

கடகம் :

மனத்தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மரியாதை உயரும்.
பூசம் : திறமைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : செலவுகள் உண்டாகலாம்.

சிம்மம் :

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டு வெற்றி கனியை எட்டி பிடிப்பீர்கள். சுயதொழில் சார்ந்த எண்ணமும், முயற்சியும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

கன்னி :

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : நாட்டம் அதிகரிக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் மேம்படும்.
சித்திரை : மனக்கசப்புகள் நீங்கும்.

துலாம் :

பிள்ளைகளின் செயல்பாடுகள் மற்றும் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பல பிரச்சனைகளை தவிர்க்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனோதைரியம் கூடும். எதிர்காலம் தொடர்பான ஒருவித பயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அக்கறை அதிகரிக்கும்.
சுவாதி : கோபத்தை குறைக்கவும்.
விசாகம் : மனோதைரியம் கூடும்.

விருச்சிகம் :

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளால் வீண் விரோதம் ஏற்படும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கேட்டை : விரோதம் ஏற்படும்.

தனுசு :

கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படும். விலகி நின்ற உறவினர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். நுண்கலை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஜீரண கோளாறு போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம் :

வேலைகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
திருவோணம் : நன்மை உண்டாகும்.
அவிட்டம் : கவனம் தேவை.

கும்பம் :

உறவினர்களின் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : மரியாதை கூடும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம் :

அண்டை, அயலாரின் ஆதரவுகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : உற்சாகம் பிறக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...