இன்றைய தினப்பலன்கள் (27.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (27.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தாய்மாமன் உறவுகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : அமைதி வேண்டும்.
பரணி : சூட்சமங்களை கற்பீர்கள்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் :

வெளியூர் பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும். கல்வி தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் :

தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை அமைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

கடகம் :

குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணைங்கள் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த பழைய சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தெளிவு பிறக்கும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

சிம்மம் :

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தடைபட்டு நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான வாய்ப்புகள் தேடி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : தொடர்புகள் அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி :

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் இலாபம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளால் சாதகமான நிலை ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.

துலாம் :

திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : சிக்கல்கள் குறையும்.

விருச்சிகம் :

அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும் போது கவனத்துடன் பேசவும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டம் வகுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

தனுசு :

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். நண்பர்களின் மூலம் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : நற்பெயர்கள் கிடைக்கும்.
உத்திராடம் : அபிவிருத்தி ஏற்படும்.

மகரம் :

பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். எதிலும் நிதானம் வேண்டும். புதிய வேலைதேடுபவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : செயல்பாடுகள் மேலோங்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

கும்பம் :

பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். ஆவணங்களை கையாளும் போது நிதானம் வேண்டும். தாய்வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகவே காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : கவலைகள் தோன்றும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : மந்தநிலை உண்டாகும்.

மீனம் :

சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். புதிய நபர்களின் வரவால் சுபவிரயம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் செய்வீரகள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
பூரட்டாதி : புகழ் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபவிரயம் ஏற்படும்.
ரேவதி : முடிவுகள் சாதகமாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...