இன்றைய தினப்பலன்கள் (12.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (12.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : உபாதைகள் குறையும்.
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.

ரிஷபம் :

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். தொழில் நிமிர்த்தமான தனவரவுகள் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : இலாபகரமான நாள்.
ரோகிணி : உறவு மேம்படும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுனம் :

உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தலைமை பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : சுபமான நாள்.
புனர்பூசம் : சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

கடகம் :

தர்க்க விவாதங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : எச்சரிக்கை வேண்டும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : ஆதாயம் உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : புகழ் உண்டாகும்.

கன்னி :

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். சுயதொழில் சார்ந்த முடிவுகளில் நிதானம் வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : மாற்றம் பிறக்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

துலாம் :

தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். புதிய கலைகள் கற்பதற்கான ஆர்வம் ஏற்படும். செய்யும் செயல்களால் தனலாபம் உண்டாகும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ண நிறம்
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம் :

தொழிலில் பொருள் தேக்க நிலை நீங்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கடன் உதவிகள் சாதகமான பலனை அளிக்கும். தாய் பற்றிய பழைய நினைவுகள் மனதில் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : நினைவுகள் தோன்றும்.

தனுசு :

நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான சூழல் அமையும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.

மகரம் :

போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்தொழிலின் மேன்மைக்காக புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

கும்பம் :

புனித யாத்திரை செல்வதற்கான எண்ணங்கள் மேம்படும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புத்திரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.

மீனம் :

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரைகளால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
ரேவதி : சாதகமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...