இன்றைய தினப்பலன்கள் (09.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (09.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : புதிய நட்பு கிடைக்கும்.
பரணி : இலாபம் அடைவீர்கள்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.

ரிஷபம் :

கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் கூடும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தொழிலில் அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் பெரிதும் உதவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : கவலைகள் தோன்றும்.
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.

கடகம் :

வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூசம் : வேகம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம் :

அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி :

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சித்திரை : வேறுபாடுகள் மறையும்.

துலாம் :

தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : தெளிவு பிறக்கும்.
சுவாதி : நன்மை உண்டாகும்.
விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.

விருச்சிகம் :

தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்விக்கான முயற்சிகள் எண்ணிய பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : இலாபம் ஏற்படும்.
கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.

தனுசு :

கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகரிக்கும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : விமர்சனங்கள் நேரிடலாம்.

மகரம் :

பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வீர்கள். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : சேமிக்க முயல்வீர்கள்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.

கும்பம் :

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நலீ ம்
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் :

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...