வரலாற்றில் இன்று – 05.06.2020 – உலக சுற்றுச்சூழல் தினம்

 வரலாற்றில் இன்று – 05.06.2020 – உலக சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

முகம்மது இசுமாயில்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (Quaid-e-Millat) என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.

இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார்.

மக்களுக்கு வழிகாட்டும் தலைவரான இஸ்மாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ‘காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்’ (Nagai Quaid-E-Millet) என்று பெயர் சூட்டியது.

முக்கிய நிகழ்வுகள்

1819ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கணித வல்லுநருமான ஜான் கோச் ஆடம்ஸ் (John Couch Adams) பிறந்தார்.

1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில எழுத்தாளரான ஓ ஹென்றி மறைந்தார்.

1900ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான ஸ்டீபன் கிரேன் (Stephen Crane) மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...