இன்றைய தினப்பலன்கள் (04.06.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற வீண் அவச்சொற்களை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : அவச்சொற்கள் ஏற்படலாம்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம் :

தலைமை அதிகாரிகளால் ஆதரவான சூழல் ஏற்படும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : முடிவுகள் சாதகமாகும்.

மிதுனம் :

வெளிநாட்டு பயணங்களில் உள்ள தடைகள் நீங்கும். சம வயதினரால் சாதகமான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய சிந்தனைகளும், குழப்பமும் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : தடைகள் நீங்கும்.
திருவாதிரை : ஆதரவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.

கடகம் :

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் : ஆசிகள் கிடைக்கும்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். வாக்கு திறமையால் இலாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : ஒற்றுமை மேம்படும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

கன்னி :

தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் புதுவிதமான பயணங்கள் மற்றும் அனுபவம் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம் :

சம வயதினரிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனம் சம்பந்தமான பணிகளில் மத்தியமான இலாபம் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் பிறரின் ஆலோசனைகளை கேட்கவும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம் :

சாஸ்திர அறிவுகளில் மேன்மை உண்டாகும். புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு :

உறவுகளால் அனுகூலம் உண்டாகும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். புதிய வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் அமையும். உங்களின் மீதான மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : அனுகூலம் உண்டாகும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : மரியாதைகள் அதிகரிக்கும்.

மகரம் :

ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். அவ்வப்போது உடல் சோர்வு தோன்றி மறையும். இணையம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

கும்பம் :

சமூக பணி தொடர்பான செயல்பாடுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிறருக்கு உதவும் போது கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : கவனம் தேவை.
பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.

மீனம் :

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : உதவிகள் சாதகமாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...