இன்றைய (22-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய (22-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உறவினர்களிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். செயல்பாடுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். பயணங்களில் இருந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மதிப்புகள் உயரும்.
பரணி : நினைவாற்றல் மேம்படும்.
கிருத்திகை : தடைகள் அகலும்.

ரிஷபம் :

வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் தெளிவான சிந்தனைகள் ஏற்படும். அறிவுத்திறன் மேம்படும். பிறரின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : சிந்தனைகள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

மிதுனம் :

பணிபுரியும் இடங்களில் திருப்திகரமான சூழல் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் சோர்வும், மனஅழுத்தமும் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : சோர்வு குறையும்.

கடகம் :

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மனக்கசப்புகள் குறையும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம் :

பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். சமூக பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : உயர்வான நாள்.
பூரம் : வசதிகள் மேம்படும்.
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.

கன்னி :

வருமானம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

துலாம் :

மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும் போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். இறை நம்பிக்கை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : பதற்றமின்றி செயல்படவும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : காலதாமதம் ஏற்படும்.

விருச்சிகம் :

வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் அதிகரிக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் மேம்படும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : அன்யோன்யம் மேம்படும்.
கேட்டை : அனுகூலமான நாள்.

தனுசு :

போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொதுநலப் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம் :

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முடிவுகளில் நிதானம் வேண்டும். சர்வதேச வணிகம் சார்ந்த முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.
அவிட்டம் : முதலீடுகளில் கவனம் வேண்டும்.

கும்பம் :

நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

மீனம் :

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : கனிவு வேண்டும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : திட்டங்கள் ஈடேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...