வரலாற்றில் இன்று – 08.05.2020 – ஜீன் ஹென்றி டியூனண்ட்

அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.

தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (A Memory of Solferino) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.

நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக தாலசீமியா நோய் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக தாலசீமியா நோய் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு இரத்தச்சோகை ஏற்படும்.

மேலும் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதனால், மக்களிடம் தாலசீமியா நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

முக்கிய நிகழ்வுகள்

1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மீக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!