கிராமம் மொத்தமும் கோலாகலமாய் இருந்தது. முதலியாரின் வீட்டில் நடக்கும் விசேஷம் அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு, ஊர் மொத்தமும் சமைக்க கூட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் ஊருக்கே பந்தல் போட்டு விருந்து சாப்பாடுதான். பெண் வீட்டாரும் வந்துவிட்டார்கள் எல்லாருக்கும் எல்லாமும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. கல்யாணநாள் முதல் பெண் அழைப்பு மயில் போன்ற தோகையுடைய தேரை அலங்கரிக்கப்பட்டு பெண் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வருவதற்கான சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறியது. சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய, அதிகாலை முகூர்த்தம் என்பதால் சிலர் […]Read More
க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக காத்திருந்து தொடர் படித்தது இன்றும் மனதில் பசுமையாய்! அந்தக் கதையின் ‘சுருக்’ இங்கே உங்களுக்காக. இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் – சுபமதி பெரும் பணக்காரர் பன்னீர்செல்வத்தின் ஒரே மகள். கல்லூரி மாணவியான […]Read More
“என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மாஎன் உயிர்நின்னதன்றோ” ஜெகன் நாதன் வாசலில் செருப்பை கழற்றி விட்டார். ஏற்கனவே சந்தீப் விஷயம் சொல்லிதான் கூட்டி வந்திருந்தான். மித்ராவும் சொல்லியிருந்தாள். அவர்களை மாதிரி தான் எதுவும் செய்யக் கூடாது என்று புரிந்திருந்தார் ஜெகன். அவர் காரியவாதி. குள்ளநரி. காசுக்காக என்ன வேஷம் வேண்டுமானாலும் போடலாம் என்று நினைக்கும் நரித்தனம் மிகுந்தவர். பின்னிருந்து முதுகில் குத்தியே பழக்கம்? மித்ரா சந்தீப் காதல் பற்றி அறிந்ததுமே அவர் சாய் நாதனப் பற்றி விசாரித்தார். வசு […]Read More
ஆலிங்கன மயக்கம்! இருளும் ஒளியும் ஒன்றையொன்று பிரியமாய்த் தழுவிக்கொண்டிருந்தது. அங்கங்கே ஏற்றப்பட்டிருந்த தீப விளக்குகள், கொஞ்சமும் அசையாது நேர்த்தியாய் கைகூப்புவது போல் நிமிர்ந்து எரிந்துகொண்டிருக்க, மெல்லிய பனிப்படலம் தவழ்வது போல் அகில் கலந்த சாம்பிராணிப் புகை இதமாய் வியாபித்தது. ஜன்னல் திரைகள் ரம்மியமாய் வர்ண ஜாலங்களோடு சலசலத்தன. ரவிவர்மாவின் ஓவியத் தூரிகையிலிருந்து ஜனித்து வந்த மாதிரி, மார்புக் கச்சையும் இடையில் பட்டாடையும் அணிந்தபடி, ஒரு தேவதைபோல் மிதந்து வந்துகொண்டிருந்தாள் அகிலா. அவளது விரிந்த கூந்தல், இரவின் விரிப்புபோல் […]Read More
ஆர்ஜேவின் வீடு இருந்த தெருவில் நுழைந்தவன் வீட்டில் இருந்து பத்தடி தள்ளி நின்று அங்கிருக்கும் சூழ்நிலையை கணக்கிட்டு கொண்டான்.. மாளிகையாகவும் இல்லாமல் சிறிய வீடாகவும் இல்லாமல் நான்கு புறமும் கோட்டை மதில் போன்ற சுவற்றுடன் இருந்தது . வீட்டை சுற்றி ஆங்காங்கே ஆட்கள் காவலில் இருந்தனர். முழுவதுமாக ஆராய்ந்த பின் எங்கே எப்படி நுழைவது என்று மனதிற்குள்ளேயே மடிவு செய்ய ஆரம்பித்தான். வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்த டீ கதையில் டீயை வாங்கி அருந்திக் கொண்டே யோசித்தான். […]Read More
“இந்த மீனாட்சி வீட்டுக் கல்யாணத்தைவிட, நம்ம வைஷூவோட கல்யாணத்தைப் பிரமாதமா நடத்தி, அவளை மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி செய்யணும். ஆனாலும், இத்தனை அலட்டல் ஆகாது. தெரிஞ்சவளாச் சேன்னு, அவளோட பொண்ணு கல்யாணத்துக்குப் போனா… என்னமோ, ஊர்ல இல்லாத மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டாளாம். விக்ரமைப் பத்திச் சொல்லியிருந்தா அவ்வளவு தான். அவளுக்கு நெஞ்சே வெடிச்சிருக்கும்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் தேவிகா. ‘நல்லவேளை… சொல்லாமல் வந்தியே’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்ட சங்கரன், மனைவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அமைதியாக […]Read More
இரண்டு நாட்களாக மகன் மெட்ராஸ்க்கு சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்த உடனேயே அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான் போயிருப்பான் என்று நினைத்து கொண்டாலும் அதை மகனின் கேட்டு தனக்கு தெரிந்தபடி காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதி காத்தார் ஆனால் பிரச்சனை வேறு விதமாக வரப்போவது தெரியாமல் மகனிடம் பேசுவதற்குக் காத்திருந்தார். அன்றைய இரவு முதலியார் மகனிடம் பேசிவிடவேண்டும் என்று வாத்தியாரையும் வரச் சொல்லியிருக்கிறார். நிச்சயம் என் குடும்பத்திற்கு விடிந்துவிடும். முதலியார் தவிப்போடு கண்ணனைப் பார்த்து […]Read More
காதல் கதைகள் நிறையப் படித்திருப்பீர்கள். இந்தக் கதை – பி.கே.பியின் வார்த்தைகளில் சொன்னால் – ‘காதலைப் பற்றிய கதை!’ நிஜமான காதல் என்ற உணர்வை முப்பரிமாணத்தில் காட்டி, உண்மைக் காதலை உயர்த்திப் பிடிக்கும் கதை. குளிர் மேகங்கள் நிரம்பிய மாலையில் கடற்கரைக் காற்றில் நடக்கும் போது உணரும் இதத்தை இந்தக் கதையில் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் எழுத்து நடையில் உணர்வீர்கள், ரசிப்பீர்கள்; அந்த உணர்வை முழுமையாகப் பெற, இந்த ‘கேப்ஸ்யூல் நாவல்’ படிததால் போதாது. ‘தொட்டால் தொடரும்’ […]Read More
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடிமெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி “காலம் மாறலாம், நம் காதல் மாறுமோ” வாணி ஜெயராமின் குரல் மிருதுவாக காதுகளில் நுழைந்து தாலாட்டியது. சின்ன மியூசிக் பிளேயர் மெதுவாகப் பாடியது. சிட் அவுட்டில் ஈஸிசேரைப் போட்டு படுத்திருந்தார் சாய் நாதன், இங்கிருந்து பார்த்தால் தெரு கடைசி வரை தெரியும். மதியம் மூன்றுமணி, காலை பத்தரை மணிப்போல் இங்கு வந்து அமர்ந்து விடுவார். சன்னமாகப் பாட்டு கேட்டபடி சாய்ந்திருப்பார். எல்லாமே என்பதுகளில் […]Read More
மரணம் என்பது வரம்! விருந்துக் கூடம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வட்ட வடிவிலான அறைக்குள், சுற்றிலும் தரையில் அமர்ந்து சாப்பிட அழகிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலகலப்பாக சகஜமாக உரையாடியபடியே அமர… எளியவகை அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதில் காய்கறிகளும் கனிவர்க்கங்களும் மட்டுமே அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. வறுவல் வகைகள் தென்படவில்லை. பெரும்பாலும் அவியல் வகை உணவுகளே தயாரிக்கப்பட்டிருந்தன. கீரை வகையறாக்களும் பிரதானமாய் இலைகளில் இடம்பிடித்திருந்தன. சுவையும் ஆரோக்கியமும் கொண்ட உணவுவகைகளை […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!