காணுமிடந்தோறும் நின்றன் கண்ணொளி வீசுதடிமானுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா! மனசு பொங்கியது. சந்தோஷ நுரை கொப்புளிக்க, குபு குபுவென்று பொங்கிச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. சுக்கானையும் சாய் நாதனின் உணர்வுகள் தாக்கியது. நம்ப முடியவில்லை. உண்மையா? இழந்த என் பொக்கிஷம் என்னிடமே திரும்பி வந்து விட்டது.இது கனவில்லையே!! சாய் நாதன் இன்னும் நம்ப முடியாமல் தவித்தார். மனசு முழுதும் மலர்க் காடாகியது. நம்ம குலதெய்வம் நம்ம வீட்டுக்கு வந்திருச்சி. ஒரு பாயாசம் வைக்கிறேன் எஜமான் […]Read More
அறிவானந்தர் சாகடித்துவிட்டார்! அகிலாவிற்குள் மீண்டும் மனச்சலனம் புகுந்துகொண்டது. எதற்காக அறிவானந்தரிடம் காதல் குறித்துப்பேசினேன். அவர் இதயத்தில் யார் இடம்பிடித்தால் எனக்கென்ன? அவர் திருமணத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? அவர் யாரையாவது திருமணம் பண்ணிக்கொள்கிறார். அல்லது பண்ணிக்கொள்ளாமலே போகிறார். அந்தக் கவலை எனக்கு எதற்கு? அவர் இதயத்தில் காதல் உணர்ச்சி பொங்கினால் என்ன? பொங்காவிட்டால்தான் என்ன? அவரது காதல் அனுபவங்கள் பற்றி நான் ஏன் கேட்கவேண்டும். அவரைப்பறி நான் ஏன் அக்கறைகாட்டவேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நான் […]Read More
“ஆர்ஜே தாண்டவத்தோட சரக்கை அடிச்சிட்டான். நாளைக்கு காலையில் ரெண்டு குரூப்பும் சந்திக்கிறாங்க. எப்படியும் நாளைக்கு இரவுக்குள்ள சரக்கை வெளில எடுத்தாகனும். அதனால பெரிய அளவில் அவர்களுக்குள்ள போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்.” “ம்ம்……ஓகே ஆனா எனக்கு இப்போ எந்த டீடைல்ஸ்சம் வேண்டாம். வேலையை சீக்கிரம் முடிக்க பாருங்க. போன தடவை மாதிரி மிஸ் ஆக கூடாது. இதை பத்தி மீடியாவுக்கு தெரிஞ்சா கிழி கிழிச்சிடுவானுங்க. அதுமட்டுமில்லை நம்ம நாட்டின் பாதுக்காப்புக்கே கேடு விளைவிக்கிற ஆட்களை இத்தனை நாள் விட்டு வச்சதே […]Read More
“மீதி உனக்குப் புரியலையாக்கும்” என்ற அத்தையைப் பார்த்து அசட்டுத்தனமாய் புன்னகைத்தாள். “ரெண்டும் கூட்டுக்களவாணிங்க. இவளுக்கு எதுவும் தெரியாதாம்; அதை நாம நம்பணுமாம்!” என்று அவளது காதைப் பிடித்துத் திருகினார் செந்தளிர். “ஆ! வலிக்குது அத்தை” என்று அலறியபடி காதை விடுவித்துக் கொண்டவள், “என்னையே டார்கெட் வச்சிப் பேசுங்க. உங்க செல்லப் புத்திரனை பிடிங்க. அவன் என்னமோ ஒண்ணும் தெரியாதவன் மாதிரியும்… நான்தான் எல்லாத்துக்கும் காரணம் போலவும் என்னையே சொல்லுங்க. என்னதான் ஒரு அப்பாவிப் பொண்ணு தனியா மாட்டிகிட்டாலும், […]Read More
கையில் உணவுப் பொட்டலங்களோடு வந்த வாத்யாரை நன்றியுடன் பார்த்தார் ராமதுரை. “நீங்க கிளம்பின நேரத்திற்கு ஏதும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் அதான். முதல்ல சாப்பிடுங்க மத்ததை அப்பறம் பேசிக்கலாம்.” “ரொம்ப நல்லது வாத்தியாரே நான் பசி தாங்க மாட்டேன். சென்னை மாதிரி இங்கே கிளப்பு கடைகளும் இல்லை பசிக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சி கிட்டே இருந்தேன் !”. ராமதுரை கட்டுச்சோற்றை பிரித்து உண்ண ஆரம்பித்து விட்டார். வாத்தியார் வேணியிடம் ஒரு பார்சலை நீட்டினார். “எனக்கு இப்போ […]Read More
கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் – அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து கொண்டு வரச் சொல்கிறான். ஜகந்நாத ராவின் உதவியாளர் ராஜ்கோபால் சம்பத்துடன் சேர்ந்து கொள்ள, அவுட்டோர் ஷுட்டிங் நடக்கிறது. மதியம் ஸ்டுடியோவில் ஷுட் பண்ண வேண்டிய பகுதிக்காக ஸ்டுடியோ திரும்புகிறார்கள். […]Read More
ஒன்றே பலவாய் நின்றோர் சக்திஎன்றுந் திகழும் குன்றா ஒளியே வசுமதி மெதுவாக காரிடாரில் நடந்தாள்.நேராகச் சென்று திரும்பினால் ஹரிணி இருக்கும் இடம் வந்து விடும். அவளைப் பார்த்தாலே மனசுக்குள் ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்து விடும். புன்னகையுடன் மேம் என்று வந்து கையைப் பிடித்துக் கொள்வாள். கீமோ கொடுக்கும் வரை அருகில் இருப்பாள். ஆர் யூ ஆல்ரைட் என்று கேட்டபடி எதானும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். ரூமில் கொண்டு வந்து விட்டு மாலை டிச்சார்ஜ் செய்யும் […]Read More
ரகசியங்களைத் திறக்கும் சாவிகள்! மறுநாள் விடிந்தும்வெகுநேரம் படுக்கையிலேயே கிடந்தாள். ஆனால் அந்த அறவழிச்சாலை அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்துவிட்டது. தியானம், யோகா, நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, இசை, தோட்டவேலை. சமையலுக்கான ஆயத்தங்கள் என மிருதுவாக, தாளகதியோடு பதட்டமில்லாமல் எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலையில் தேநீர் கொண்டுவந்து எழுப்பிய பூங்கொடியிடம். ‘புது இடமாச்சே. நைட் சரியா தூக்கம் வரலை, கொஞ்சம் தூங்கிட்டு வர்றேனே’ என்றபடி படுக்கையில் மறுபடியும் கொஞ்ச நேரம் சாய்ந்துவிட்டாள். தாமதமாக எழுந்து, குளித்து முடித்து தன்னை தயார் செய்துகொண்ட […]Read More
பில்லுமேட்டில்……. ஊதக் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்க காட்டு மரங்கள் வேரோடு பிடுங்கி எறிந்து விடும் ஆக்ரோஷத்துடன் ஆடிக் கொண்டிருந்தன. அறையின் உள்ளே உத்ராவின் முன் நின்றிருந்த ஆர்ஜே குனிந்து அவள் பாதங்களில் சலங்கையை கட்டிக் கொண்டிருந்தான். அவன் தன் பாதங்களில் சலங்கையை கட்டுவதை பிடிக்காமல் முகத்தை அருவெறுப்பாக சுளித்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு “ நீ என்ன சொன்னாலும் உன் முன்னாடி நான் ஆடவே மாட்டேன்” என்றாள் ஆங்காரத்துடன். சலங்கையை கட்டி முடித்து விட்டு எழுந்தவன் […]Read More
“ஆமாம் மாமா. ஃப்ரெண்ட் வீட்டில் தங்கியிருக்கேன். நாளைக்கு விக்ரம் சார் வர்றார். அவங்க வீட்டுக்கும் பத்திரிகை கொடுத்துட்டு, மதியம் கிளம்பிடுவேன்.” “நல்லதுப்பா. நீ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் வைஷுவுக்கு ஒரு ஃபோன் செய்து பேசிடு. அப்போதான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். அதுவரை தூங்காமல் உட்கார்ந்திருப்பா” என்று சங்கரன் சிரிக்க, “கட்டாயம் மாமா…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் ராகவ். அதுவரை புன்னகைத்தபடி நின்றிருந்த இருவரின் முகமும், சட்டென்று உணர்ச்சியற்ற பாவனையை வெளிப்படுத்தியது. ஒரு பெரிய […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!