பாப்கார்ன்
‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
கோட் படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் […]
விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்விவிருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய […]
“சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 44 படத்தில் நடிக்கவிருக்கும் நபர்கள், சூட்டிங் தொடங்கவிருக்கும் நாள் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா […]
வெளியானது உறியடி விஜயகுமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!
‘உறியடி’ புகழ் நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். உறியடி, உறியடி 2 படங்கள் மூலம் பிரபலமானார் நடிகரும், இயக்குநருமான விஜயகுமார். கடைசியாக ஃபைட் கிளப் படத்தில் நடித்தார். இந்தப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில், ‘எலக்சன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் ரிச்சா ஜோஷி, […]
துவங்கியது ‘வீர தீர சூரன் 2’ படத்தின் படப்பிடிப்பு..!
விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் 62வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என […]
நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். […]
வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் […]
ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல்..!
பாசிலின் ஆவேசம் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான திரைப்படம் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது. […]
ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய ‘சூப்பர்மேன்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!
திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஜேம்ஸ் கன், அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘சூப்பர்மேன்’ படத்தின் புதிய சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட்டின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். டேவிட் கோரன்ஸ்வெட் ‘சூப்பர்மேன்’ ஆக சோபாவில் அமர்ந்திருப்பதைக் காணலாம். நீல நிற சூட், சிவப்பு உள்ளாடை, மற்றும் சிவப்பு பூட்ஸ் அணிந்து சூப்பர்மேன் வேடத்தில் நடித்த டேவிட் கோரன்ஸ்வெட் அருமையாக தோற்றமளித்தார். ‘சூப்பர்மேனின் காதலியாக லோயிஸ் லேனாக ரேச்சல் ப்ரோஸ்னஹன் மற்றும் வில்லன் லெக்ஸ் லூதராக நிக்கோலஸ் ஹோல்ட் ஆகியோரும் நடிக்க உள்ளனர். […]
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!
ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புக்களாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதற்கிடையே துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் இப்போது படத்தின் பெயர் வெளியாகியிருக்கிறது. ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பிறகு உதவி இயக்குநராக இணைந்தவர் […]