அடுத்த  4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. அதி லும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப் பதை உணர முடிகிறது. வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய ‘சூப்பர் எல்நினோ’ அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2027) வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதா வது இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (வியாழக்கிழமை) வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பிலும், 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலான காலகட்டங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு அவசியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதாவது குடை எடுத்து செல்வது, தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 28-ந்தேதிக்கு பிறகு கோடை மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் என ஆங்காங்கே கோடை மழை தீவிரம் அடையக் கூடும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.

மே 1 அல்லது 2-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவானால் அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது. மே 1-ந்தேதிக்கு பிறகு கோடை மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெப்ப அலை வீசுமா? என்பதை அப்போதுள்ள சூழலை பொறுத்தே கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!