அய்யா திரு.சிலம்பொலி செல்வர் அவர்கள் துவங்கி வைத்த, அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. திருமதி. லீலாவதி யுவராஜ் அவர்கள் கவிதை உறவு பத்திரிக்கையில் என் முகப்ப அட்டைப்படம் பார்த்தேன் என்று வாழ்த்து தெரிவித்து விட்டு சாதனை பெண்களுக்கான சக்திச்சுடர் விருது வழங்குவது பற்றியும் தெரிவித்து இருந்தார். அதற்கு தங்களின் பெயரும் தேர்வாகி இருக்கிறது என்று அறிவித்தார்.

விழாவில், பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய ‘சுவடிகள் போற்றதும்‘ புத்தகத்தை வெளியிட்டு, திரு. சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலாளர். அருமையான அறிமுக உரையை வழங்கினார். பெரும்பாலும், புத்தக வெளியீடுகளில், புத்தகம் குறித்து பேச ஆட்கள் இருக்கிறார்கள். நான் இதுவரையில் வாசிக்கவில்லை என்றுதான் ஆரம்பிப்பார்கள். ஆனால் மூன்று நூல்கள் வெளியிட்டு அதற்கான வாழ்த்துரையும், அறிமுக உரையினையும் அருமையாக பேசினார்கள்.
வள்ளுவர் குரல் குடும்பத் தலைவர் திரு. சி. இராசேந்திரன் அவர்கள் சங்கச் செல்வம் என்று சங்க இலக்கியங்கள் புத்தகம் குறித்து சுவை பட பேசினார். திருமதி. லீலாவதி யுவராஜ் அவர்கள் விதவைகளின் விடிவெள்ளி, சகோதரி சுப்புலட்சுமி அவர்களின் புத்தகங்களை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைபேராசிரியர் வாணி அறிவாளன் அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார்.

வரவேற்புரையை அய்யா சிலம்புச்செம்மல் புலவர் தமிழமுதன் அவர்கள் வழங்கினார். திருச்சி மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரேமா, எம்.ஓ.பி வைஷ்ணவா மகளிர் கல்லுாரி பேராசிரியர் திருமதி. இராஜேஸ்வரி, இராணிமேரி கல்லூரி திருமதி.சீதாலட்சுமி, தமிழக அரசின் மூதறிஞர் திருமதி. சங்கமித்ரா தனபதி மற்றும் திரு.கோதண்டராமன் அவர்களுக்கு சிறந்த நூலகர் விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதினை அவர்கள் அளித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. விருதாளர்கள் அவர்களின் ஒவ்வொரு பெயரோடு அவர்களின் விவரங்கள், பணிகள், சாதனைகள் எனப் பட்டியலிட்டார்கள்.
விருதாளர்களின் பெயர்களை அழைத்ததும், அவர்களை கைபற்றி அன்போடு மேடைக்கு அழைத்துச் சென்றத அம்மா உலகநாயகி பழனி அவர்கள். ஆளுயர ரோஜா மாலையிட்டு வாழ்த்தி விருதளித்தார்கள். விருதும், பரிசும் தாண்டி பன்னீரின் வாசனையோடும், குளுமையோடும் தோள் தாங்கிய ரோஜா மாலை தமிழ் போன மலர்ந்து மணம் பரப்பியது.

நன்றி திரு. இளவரச அமிழ்தன் அவர்களுக்கும், திருமதி. லீலாவதி யுவராஜ் அவர்களுக்கும். புகைப்படம் எடுத்து தந்த மணிவாசகர் பதிப்பகம் குருமூர்த்தி அவர்கள், விழாவிற்கு வருகை தந்த அய்யா. ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள். அமுதா மெட்ரிக் பள்ளியின் நிறுவனம் திரு.அமுதா பாலகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
