இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 17 சனிக்கிழமை 2026)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 17-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்னைகளை சமாளிக்கவேண்டி வரும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர் பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அத னால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வீண்செலவுகளும் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நீண்டநாள் நிலுவையில் இருந்த பாக்கி வசூலாக வாய்ப்பு உள்ளது.

கடக ராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று கவன மாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

கன்னி ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது உங்களை உற்சாகப்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியா பாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண் பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தருவதாக இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் கடன்கள் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர் களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!