வரலாற்றில் இன்று ( ஜனவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 17 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1377 – பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.
1595 – பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
1852 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.
1893 – ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
1946 – ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1973 – பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பித்தது.
1995 – ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

பிறப்புகள்

1504 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572)

1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1790)

1781 – இராபர்ட் ஹரே, அமெரிக்க வேதியியலாளர் (இ. 1858)

1899 – அல் கபோன், அமெரிகக்க் குற்றக் குழுத் தலைவர் (இ. 1947)

1905 – தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1986)

1917 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், இயக்குநர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1987)

1922 – தோன்சே ஆனந்த் பை, இந்திய அரசியல்வாதி, வங்கியாளர் (இ. 1981)

1936 – அ. தங்கத்துரை, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1997)

1942 – முகம்மது அலி, அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (இ. 2016)

1945 – ஜாவேத் அக்தர், இந்தியக் கவிஞர், இசையமைப்பாளர்

1962 – ஜிம் கேரி, கனடிய-அமெரிக்க நடிகர்

1964 – மிசெல் ஒபாமா, அமெரிக்க சட்டவறிஞர், செயற்பாட்டாளர், அமெரிக்காவின் 46வது முதல்பெண்மணி

1985 – சிமோன் சைமன்சு, இடச்சுப் பாடகர்

இறப்புகள்

395 – முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (பி. 347)

1824 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (பி. 1760)

1930 – கௌஹர் ஜான், இந்திய இசைக் கலைஞர் (பி. 1873)

1940 – செ. இராசநாயகம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1870)

1961 – சாமி சிதம்பரம், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (பி. 1900)

1961 – பத்திரிசு லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் 1-வது பிரதமர் (பி. 1925)

1997 – கிளைட் டோம்பா, புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர் (பி. 1906)

2005 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1921)

2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1925)

2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)

2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)

2010 – ஜோதி பாசு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் (பி. 1914)

2010 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1937)

2012 – எம். எஸ். பொன்னுத்தாய், தமிழகப் பெண் நாதசுவரக் கலைஞர்

2014 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடியத் தொழிலதிபர் (பி. 1962)

2014 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)

2016 – பத்மினி பிரியதர்சினி, தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், திரைப்பட நடிகை (பி. 1944)

2016 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர் (பி. 1955)

2025 – குழந்தை ம. சண்முகலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1931)

2025 – சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (பி. 1928)

சிறப்பு நாள்

புனித வனத்து அந்தோனியார் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!