சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
