வரலாற்றில் இன்று (நவம்பர் 13)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1851 – வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.
1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.
1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
  1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995 – சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430)

1312 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இ. 1377)

1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839)

1850 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894)

1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)

1899 – ஹுவாங் சியான் புயான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982)

1913 – வி. அப்பாபிள்ளை, இலங்கை இயற்பியலாளர் (இ. 2001)

1914 – என்றி லங்லொவைசு, பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977)

1923 – ஆல்பர்ட் ராமசாமி, இரீயூனியன் அரசியல்வாதி

1933 – மோகன் ராம், தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993)

1934 – கமால் கமலேஸ்வரன், மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்

1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1940 – சவுல் கிரிப்கே, அமெரிக்க மெய்யியலாளர்

1942 – அம்பிகா சோனி, இந்திய அரசியல்வாதி

1947 – அனில் அகர்வால், இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002)

1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க இயற்பியலாளர்

1948 – உமாயூன் அகமது, வங்காளதேச எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2012)

1956 – அம்பிகா சீனிவாசன், மலேசிய சமூக நீதியாளர்.

1958 – இந்திரா சௌந்தரராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 2024)

1967 – ஜூஹி சாவ்லா, இந்திய நடிகை

1969 – அயான் கேர்சி அலி, சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி

1984 – விக்ராந்த், இந்திய திரைப்பட நடிகர்

இறப்புகள்

1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)

1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)

1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)

1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)

1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)

2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)

2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)

சிறப்பு நாள்

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!