‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 13-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகை யில் சுபச்செலவுகள் ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
கடக ராசி அன்பர்களே!
முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே!
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
கன்னி ராசி அன்பர்களே!
மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்படும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும் பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
துலா ராசி அன்பர்களே!
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தனுசு ராசி அன்பர்களே!
உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.
மகரராசி அன்பர்களே!
முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பராசி அன்பர்களே!
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
மீனராசி அன்பர்களே!
அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோ சனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில ஆதாயங்களைக் கொண்டு வரும்.
