வரலாற்றில் இன்று (அக்டோபர் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

306 – மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.
312 – முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.
1492 – ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
1834 – சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886 – நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரியிடம் இருந்து செக்கொசிலவாக்கியா விடுதலை பெற்றது.
1918 – மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
1922 – முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது. இந்நாள் கிறீசின் “ஓக்கி நாள்” (Όχι=No, இல்லை) ஆக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
1941 – லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
1942 – கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1942 – போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1948 – சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.
1962 – கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1971 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) “புரொஸ்பெரோ” என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.
1972 – முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.
1985 – சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அதிபரானார்.
1985 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2001 – பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.
2006 – 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

பிறப்புகள்

1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
1956 – மஹ்மூத் அஹ்மதிநெஜாத், ஈரான் குடியரசுத் தலைவர்

இறப்புகள்

1627 – ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)
1704 – ஜான் லாக், ஆங்கிலேய தத்துவவியலாளர் (பி. 1632)
1900 – மாக்ஸ் முல்லர், ஜெர்மனிய மொழியியலாளர் (பி. 1823)
1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)
2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)

சிறப்பு நாள்

செக் குடியரசு, சிலவாக்கியா – தேசிய நாள் (1918)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!