யாதும் ஊரே யாவரும் கேளிர்—
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த முக்கியமான மற்றும் பெரிய அளவிலான போராட்டம் (march for Australia) இந்தப் போராட்டம் நாடு முழுவதும் குறிப்பாக சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், மற்றும் காண்பேரா போன்ற முக்கிய நகரங்களில் நடந்தது.
ஆஸ்திரேலியாவின் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக வேண்டும் என்பதே இந்தப் போராட்டக்காரர்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. அவர்கள் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டின் குடியேற்றத்தால் நாட்டின் வளங்கள் முக்கியமாக (வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி ) மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியார்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் வாதிட்டனர்.
இந்தப் போராட்டம் வெளிநாட்டினர் கு டியேற்றத்திற்கு எதிராக இருந்தாலும் குறிப்பாக சீனர்கள் மற்றும் இந்தியர்களே இலக்காகக் கொண்டது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் இந்தியர்களும் சீனர்களுமே அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினராக உள்ளனர் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் நூறு ஆண்டுகளில் குடியேறியதை விட அதிகமான இந்தியர்களும் சீனர்களும் குடியேறியுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கும் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.
காவல்துறையினர் தலையிட்டு வன்முறையில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர் இந்த மோதல்கள் அப்பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கின.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அந்நிய தேசத்தினர் மத்தியில் அச்சம் நிலவியது.
ஆஸ்திரேலியாவை போலவே ஐக்கிய ராஜ்யத்திலும் சமீபத்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பெரிய போராட்டம் நடந்தது.லண்டன் நகரில் நடந்த இந்த போராட்டம் ஆயிரக்கணக்கான வலதுசாரி அமைப்பினரால் நடத்தப்பட்டது.
இந்த போராட்டக்காரர்கள் கோரிக்கை “Unite the Kingdom”என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த பேரணியை டாமி ராபின்சன் என்பவர் முன்னெடுத்து நடத்தினார். இந்தப் போராட்டத்திற்கு எதிராக நிறவெறி எதிர்ப்பு பேரணியும்(Anti-Racism counter protest) அதே இடத்தில் நடந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. யுனைடெட் கிங்டம் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வலதுசாரி போராட்டங்களில் ஒன்றாகும் இது. இரண்டாவது உலகப் போருக்கு அப்பால் ஒன்றரை லட்சம் மக்கள் கூடியது இதுவே முதல் தடவை என்று பதிவு கூறுகிறது. ஆக மொத்தத்தில் ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டம் அரசாங்கம் எந்தப் போராட்டங்களை கடுமையாக கண்டித்துள்ளன இந்த நிகழ்வுகள் உலகெங்கிலும் குடியேற்றம் தொடர்பான அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் அதிகரித்து வருவதை காட்டுகிறது.
குடியேற்றம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதா அல்லது அதன் அடையாளத்தை அழிக்குமா? இந்த விவாதம் உலகெங்கிலும் தொடர்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை இனவெறி போராட்டங்களால் போதிக்கப்படும் காலம் இது.
உலகமயமாக்கப்பட்ட சமூகத்தில் எல்லைகளை தாண்டி என் மனிதர்களின் நகர்வுகள் ஏற்படுத்தும் சவால்களையும், போராட்டங்களையும் புரிந்து கொள்வது அவசியம்.
ஒரு காலத்தில் குடியேறியவர்களால் உருவாக்கப்பட்ட தேசங்கள் இன்று குடியேற்றத்திற்கு எதிராக போராடும் வேடிக்கையான முரண்பாடு.
” அஞ்சிய மனிதர்களின் கோரிக்கைகளை இன வெறியின் குரல்கள் மூடி மறைக்கும் தருணங்கள் ஒரு நாகரிகத்தின் தோல்வியை உணர்த்துகின்றன “
அன்றே நமது தமிழ் அறிஞர் கனியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார், அதை இந்த காலகட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் உணர்ந்து ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு சட்டப்படி குடியேறும் மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று நாடு கடந்து சென்று அவர்களின் விருப்பம் ஆகும்.
எழுத்து :திவன்யா பிரபாகரன்

