வரலாற்றில் இன்று (செப்டம்பர் 23)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 23 (September 23) கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1529 – ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான்.
1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது.
1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
1821 – திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.
1846 – நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.
1884 – ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1889 – நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1932 – ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.
1941 – நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1980 – பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1983 – இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.
1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
2002 – மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.
2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

கிமு 63 – அகஸ்ட்டஸ், ரோமப் பேரரசன் (இ. 14)
1215 – குப்லாய் கான், மங்கோலியப் பேரரசன் (இ. 1294)
1930 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர் (இ. 2004)
1939 – ஹென்றி புளோஃபெல்ட், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1941 – நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்
1957 – குமார் சானு, இந்தியப் பாடகர்
1971 – முயீன் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

இறப்புகள்

1939 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)
1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
1968 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1887)
1973 – பாப்லோ நெருடா, சிலி கவிஞர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904

சிறப்பு நாள்

சவுதி அரேபியா – தேசிய நாள் (1932)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!