வரலட்சுமி விரதம் பூஜை
1/7
வரலட்சுமி விரதம் என்றாலே பெண்கள் பூஜை செய்து மகா லட்சுமியை வழிபடுவார்கள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரதம் என்றாலே பெண்கள் பூஜை செய்து மகா லட்சுமியை வழிபடுவார்கள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
2/7
பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

3/7
இந்த 2025ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதாவது, ஆடி 23, ஆடி மாதப் பௌர்ணமி அன்று திருவோண நட்சத்திரத்தில் வரலட்சுமி விரதம் வருகிறது.
இந்நாளில் பெருமாளுக்கு உரிய ஏசுதாசி மற்றும் துவாதசி செடிகள் சேர்ந்து வரும் நாளாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரலட்சுமி விரதம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்குரிய ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
வரலட்சுமி விரதம் 2025 எப்போது?

4/7
7 ஆகஸ்ட் 2025 – மாலை 6 மணி முதல் 8 மணி வரை8 ஆகஸ்ட் 2025 – காலை 6 மணி முதல் 7:20 வரை ஆகும்.8 ஆகஸ்ட் 2025 – காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல மாலை 6 மணிக்கு மேல் ஆகும்.
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்:
7 ஆகஸ்ட் 2025 – மாலை 6 மணி முதல் 8 மணி வரை
8 ஆகஸ்ட் 2025 – காலை 6 மணி முதல் 7:20 வரை ஆகும்.
பூஜைக்கான உகந்த நேரம்:
8 ஆகஸ்ட் 2025 – காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல மாலை 6 மணிக்கு மேல் ஆகும்.
5/7
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும். பின்னர் நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை வைக்க வேண்டும்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை:
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும். பின்னர் நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை வைக்க வேண்டும்.
6/7
கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும்.
அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.

சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கலாம்.அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்தி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற்கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும்.