இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 21 சனிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 21-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ள தாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி  உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவி னர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறை வேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை  அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும் பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

கும்பராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுக ளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!