நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல வேளச்சேரி உள்பட மற்ற இடங்களில் உள்ள ஆர்யாவின் உணவகங்களிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
