வரலாற்றில் இன்று ( மே 21)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 21 கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.
996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.
1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர்.
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
1864 – உருசிய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நடு கடத்தப்பட்டனர்.
1864 – இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.
1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிசைத் தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1871 – முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
1881 – அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1904 – பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1937 – ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.
1939 – கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1961 – குடிசார் உரிமைகள் இயக்கம்: அலபாமாவில் நடந்த இனவன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1966 – வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
1972 – மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
1976 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994 – யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.
1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2001 – பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.
2006 – செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2012 – யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1471 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)
1527 – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (இ. 1598)
1780 – எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயக் கொடையாளி, சீர்திருத்தவாதி (இ. 1845)
1799 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லியல் ஆய்வாளர் (இ. 1847)
1873 – ஹான்ஸ் பெர்கர், செருமானிய நரம்பியல் நிபுணர் (இ. 1941)
1895 – சு. நடேசபிள்ளை, இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
1915 – சி. வி. நரசிம்மன், ஐநா உயர் அலுவலர், எழுத்தாளர் (இ. 2003)
1921 – ஆந்திரே சாகரவ், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 1989)
1930 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (இ. 2015)
1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், இலங்கை ஊடகவியலாளர்
1954 – அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர்
1959 – நிக் காஸ்சவேட்ஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1959 – அப்துல்லா யாமீன், மாலைத்தீவுகளின் 6வது அரசுத்தலைவர்
1960 – மோகன்லால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1960 – ஜெப்ரி டூபின், அமெரிக்க வழக்கறிஞர்
1961 – சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியலாளர், வரலாற்றாளர்
1967 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (இ. 2007)
1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (இ. 1997)
1974அதிதி கோவத்திரிகர், இந்திய நடிகை, உலக அழகி

இறப்புகள்

1639 – தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலிய சோதிடர், கவிஞர் (பி. 1568)
1786 – காரல் வில்லெம் சீலெ, செருமானிய-சுவீடிய வேதியியலாளர் (பி. 1742)
1861 – இயூஜின் டி மசெனோ, பிரான்சிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1782)
1911 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
1935 – ஜேன் ஆடம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1860)
1964 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1991 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1944)
1991 – தேன்மொழி ராசரத்தினம், விடுதலைப் புலிகளின் போராளி (பி. 1974)
2009 – க. பத்மநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1948)
2011 – சுவாமி அஜராத்மானந்தா, இலங்கை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (மொண்டெனேகுரோ, 2006)
கடற்படை நாள் (சிலி)
பன்னாட்டுத் தேயிலை நாள்
உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம்
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!