வெங்கி அட்லூரி இயக்கவுள்ள ‘சூர்யா 46’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், ‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
