உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு உதவிய கமல்ஹாசன்..!

குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சோபனா பிளஸ்-2 பொதுத் தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில், கடன் சுமை காரணமாக மாணவி சோபான அதே பகுதிகளில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில், மாணவியின் கதையை சமூக வலைதளம் மூலம் அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்தார். அங்கு, கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக மாணவி உயர்கல்வி தொடரவும், அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஏற்பாடு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!