வரலாற்றில் இன்று ( மே 19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 19  கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.
1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது.
1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;
1542 – புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.
1568 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.
1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1743 – சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.
1780 – நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.
1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.
1828 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
1834 – இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1919 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1934 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.
1950 – இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.
1950 – பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.
1961 – சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.
1961 – அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1991 – குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
2012 – சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.
2018 – வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.

பிறப்புகள்

701 – லி பை, சீனக் கவிஞர் (இ. 762)
1762 – யோஃகான் ஃவிக்டெ, செருமானிய மெய்யியலாளர் (இ. 1814)
1824 – நானா சாகிப், இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857)
1858 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1922)
1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938)
1890 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969)
1910 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949)
1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங், இந்திய அரசியல்வாதி (இ. 1965)
1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
1914 – கே. டி. கே. தங்கமணி, இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001)
1925 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998)
1925 – மல்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965)
1933 – எட்வர்ட் டி போனோ, மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005)
1934 – ரஸ்கின் பாண்ட், இந்திய எழுத்தாளர், கவிஞர்
1938 – கிரிஷ் கர்னாட், கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019)
1964 – முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010)
1984 – தேச. மங்கையர்க்கரசி, தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்

இறப்புகள்

1296 – ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215)
1536 – ஆன் பொலின், இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501)
1623 – மரியம் உசு-சமானி, முகலாயப் பேரரசி (பி. 1542)
1864 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804)
1895 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853)
1898 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809)
1904 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1839)
1935 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888)
1952 – பெங்களூர் நாகரத்தினம்மா, கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878)
1985 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)
1996 – ஜானகி இராமச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழக அரசியல்வாதி (இ. 1924 )
1994 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி, ஊடகவியலாளர் (பி. 1929)
2007 – ஆ. பு. வள்ளிநாயகம், தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953)
2009 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (பி. 2017)

சிறப்பு நாள்

இனவழிப்பு நினைவு நாள் (கிரேக்கம்)
ஓ சி மின் பிறந்தநாள் (வியட்நாம்)
கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய அமெரிக்கா)
அன்னையர் நாள் (கிர்கிசுத்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!