‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – சசிகுமார் நெகிழ்ச்சி..!

நடிகர் ரஜினிகாந்த் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரான இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலகளவில் 15 நாட்களில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டியதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,

“படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, “சூப்ப்ப்பர் சசிகுமார்…” என அழுத்திச் சொன்னார்.”தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்…” என ரஜினி சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி”

இவ்வாறு நடிகர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!